பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் வழிகாட்டலுக்கிணங்க தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் தேசிய உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டித்தொடர் புத்தம்புதிய சர்வதேச மதிப்பீட்டுத் தகவுத்திறன்களுக்கு அமைவாக வெளியிடப்படுகின்றது.

உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் பற்றி நிறுவனம் கொண்டுள்ள அறிவினை நடைமுறையில் யதார்த்தமானதாக மாற்றுகின்ற செயற்பாங்கு அதன்போது மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படுகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை உச்ச வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் பயன்பாட்டுக்கு எடுத்து நிறுவனம்சார் நோக்கங்களை அடைவதன் உன்னதமான தன்மையை தொழில்நுட்பரீதியாக மிகவும் ஒழுங்கமைந்த மதிப்பீட்டுச் செயற்பாங்கினூடாக அளவிட்டு தேசிய மட்டத்தில் மதிப்பீட்டுக்கு உள்ளாக்குவது இதன் முக்கியமான குறிக்கோளாகும்.

உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் ஊடாக மிகவும் உன்னதமான மட்டங்களை நோக்கிச் செல்வதற்கு அவசியமான அறிவினைப் பெற்றுக்கொடுத்து வழிகாட்டலை வழங்க தேசிய உற்பத்தித்திறன் செயலகம் சதாகாலமும் தயார்நிலையில் உள்ளது. தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடருக்காக நீங்கள் காட்டுகின்ற ஒத்துழைப்பினையும் பங்களிப்பினையம் பெரிதும் பாராட்டுவதோடு உங்களின் எல்லாவிதமான வெற்றிகளுக்காகவும் எங்களின் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரித்துக்கொள்ள விரும்புகிறேன்.